9th of October 2013
சென்னை::சித்தியுடன் கோபித்துக் கொண்டு, ஆந்திரா பக்கம் போய்விட்ட அஞ்சலி, வழக்கு, கோர்ட் என, சென்னையில் பிடி இறுகியதால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். சென்னைக்கு வருவதையும், அவர் விரும்பவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள அஞ்சலியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்போது, அவர்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைத்துள்ளது.
தெலுங்கில், மகேஷ் பாபுவுடன், அவர் நடித்த, ‘சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு படம், தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. விரைவில், தமிழகத்தில் வெளியாக உள்ள அந்த படத்தில், அஞ்சலிக்கு கலர் கலரான டூயட் பாடல்கள் உண்டாம். இதனால், அஞ்சலியின் தமிழக ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.
Comments
Post a Comment