16th of October 2013
சென்னை::பெண் இயக்குனர்கள் படத்தில் நடிப்பது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் பிரியா ஆனந்த். நூற்றெண்பது, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். பெண் இயக்குனர் கவுரி ஷிண்டே இந்தியில் இயக்கிய இங்லிஷ் விங்லிஷ் படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்தார். அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்தில் சிவா ஜோடியாக நடித்திருக்கிறார். பெண் இயக்குனர்கள் படங்களில் நடித்த அனுபவம் பற்றி பிரியா ஆனந்த் கூறியதாவது:
கவுரி, கிருத்திகா இரண்டு பெண் இயக்குனர்கள் இயக்கிய படத்தில் நான் நடித்தது சந்தோஷம். அவர்களுக்கு அதுதான் முதல் படம். இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. நான் இன்றைக்கு புன்னகையுடன் இருப்பதற்கு காரணம் இந்த இயக்குனர்கள்தான். நல்ல ஸ்கிரிப்ட்டுடன் வரும் பெண் இயக்குனர்கள் படத்தில் நடிக்க முதல் முக்கியத்துவம் தருவேன். அடுத்து அதர்வாவுடன் இரும்பு குதிரை என்ற படத்தில் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங்கிற்காக இத்தாலி சென்றிருக்கிறேன்.
இதனால் வணக்கம் சென்னை பட ரிலீஸின்போது சென்னையில என்னால் இருக்க முடியவில்லை. ஆனாலும் படம் பார்த்தவர்கள் தங்களது வாழ்த்தை இணைய தளம் மூலமும், விமர்சனம் மூலமும் தெரிவித்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வாறு பிரியா ஆனந்த் கூறினார்.

Comments
Post a Comment