ரஜினியே போன் பண்ணினாராம்!.பீட்சா இயக்குனர் கார்த்தி சுப்புராஜு!!!

24th of October 2013
சென்னை::சின்ன வயதிலேயே கிடைக்கிற பாராட்டுகள்தான் காதில் இறக்கை முளைக்க வைக்கும். சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு பாராட்டு அட்லீக்கு கிடைத்திருக்கிறது. ராஜா ராணி படம் பார்த்துவிட்டு வெல்டன் என்று பாராட்டியவர் கலைஞானி கமல்ஹாசன்.

இதே போலொரு பாராட்டு பீட்சா இயக்குனர் கார்த்தி சுப்புராஜுக்கும் கிடைத்ததாம். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து. மதுரையில் ஜிகிர்தண்டா ஷுட்டிங்கில் இருந்தவருக்கு ஒரு அழைப்பு. எடுத்து பேசியவரிடம், எதிர்முனையில் பேசியது ரஜினி. முதலில் நம்பவே இல்லையாம் இவர். யாராவது கலாக்கிறாங்களோ என்றுதான் நினைத்தாராம். ஆனால் அந்த வேகம் ஒரு கட்டத்தில் இது ரஜினி சாரேதான் என்று நம்ப வைக்க, ஆடிப்போனாராம் அவர்.

பீட்சா பார்த்தேன். ரொம்ப பிரமாதம் என்றாராம் ரஜினி. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறார்கள். யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமே என்று நினைத்த கார்த்தி சுப்புராஜ், இப்போதுதான் ரஜினி பேசிய விஷயத்தையே மெல்ல வெளியே சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் நமக்கு புரிகிற ஒரே விஷயம், ஜாம்பவான்கள் சின்னஞ்சிறு திறமைசாலிகளை உற்று நோக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதுதான்.

Comments