சிம்பு ஒரு கெஸ்ட் ரோல் பண்ணுகிறார் அல்லவா? அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஆன்ட்ரியா!!!

16th of October 2013
சென்னை::ஆன்ட்ரியாவுக்கு வருகிற வாய்ப்புகள் அத்தனையையும் அவர் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்று ஒரு டஜன் படங்களுக்கு மேல் அவர் நடித்துக் கொண்டிருப்பார்.
 
ஆனால் கதை, அதில் தன்னுடைய கேரக்டர் என்று பூதக்கண்ணாடி வைத்து பார்த்துதான் அப்படத்தில் நடிக்கவே ஒப்புக் கொள்கிறார். அவ்வளவு ஏன்? பிரஸ்சுக்கு அனுப்பும் புகைப்படங்களில் கூட, தன்னுடைய போட்டோவை கொஞ்சம் நாகரீகமாக அனுப்பி வைங்க என்கிற அளவுக்கு கேரக்டரிலும் கேரியரிலும் அக்கறை சிகாமணியாக இருக்கிறார்.
 
இவ்வளவு நுட்பமாக இருக்கிற ஆன்ட்ரியா வி.டி.வி கணேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க சம்மதிக்கிறார் என்பது அப்படத்தின் மீதிருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது.

இந்த படத்தில் சிம்பு ஒரு கெஸ்ட் ரோல் பண்ணுகிறார் அல்லவா? அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஆன்ட்ரியா. நல்ல குரல் வளம் கொண்ட இவரை, படத்தில் ஒரு பாடலும் பாட வைக்கலாமே கணேஷ்? 

Comments