சிம்புவுக்கு ஜோடியானார் ஆண்ட்ரியா!!!

14th of October 2013
சென்னை::இங்க என்ன சொல்லுது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
 
விடிவி கணேஷ் தயாரித்து நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘இங்க என்ன சொல்லுது’. இதில் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். வின்சென்ட் செல்வா இயக்கும் இந்தப் படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம்.
 
படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்று யோசித்திருக்கிறார்கள். அவர், இதுவரை சிம்புவுடன் நடிக்காத நடிகையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆண்ட்ரியாவைத் தேர்வு செய்தார்களாம். படத்தில் ஆண்ட்ரியாவை போல சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
 
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Comments