பெண்களை இழிவுப் படுத்தி வசனம்: சந்தானத்துக்கு கண்டனம்!!!

28th of October 2013
சென்னை::பெண்களை இழிவுப் படுத்தி வசனம் பேசுவதாக காமெடி நடிகர் சந்தானத்தை பெண்கள் அமைப்பினர் கண்டித்து உள்ளனர்.

ஜீவா, திரிஷா, சந்தானம் இணைந்து நடித்துள்ள 'என்றென்றும் புன்னகை' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசானது. இதில் விளம்பர படப்பிடிப்பு காட்சியொன்றில் பெண் ஊழியர் சந்தானத்திடம் வந்து அஞ்சு பத்துக்கு போகட்டுமா என்று அனுமதி கேட்பது போன்றும் அதற்கு சந்தானம் ஏன் நீ நல்லாத்தானே இருக்கே ஆயிரம், ஐநூறுக்கு போயேன் என்று இரட்டை அர்த்தத்தில் பேசி கேலி செய்வது போன்றும் வசனம் உள்ளது.

இந்த காட்சி பெண்களை கேவலப்படுத்துவது போல் உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சந்தானம் எல்லா படங்களிலும் பெண்களை இழிவுப்படுத்துவது போல் வசனம் பேசி வருகிறார். மதுபாட்டிலும் கையுமாக போதையில் அவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்கள் பெண்களையும் புண்படுத்தி உள்ளது. இது போன்று வசனம் பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை யேல் சந்தானத்துக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும். தணிக்கை குழுவினர் இதுபோன்ற வசனங்களை நீக்கி விட்டுத்தான் அனுமதி சான்று அளிக்க வேண்டும்'' என்று கூறினர்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments