மிஷ்கினை பாராட்டிய கமல்ஹாசன்!!!

2nd of October 2013
சென்னை::மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்'. இரவில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடித்தவர்களில் மிஷ்கினை தவிர, மற்ற அனைவரும் புதுமுகங்களே, மேலும் படத்தில் கமர்ஷியல் படங்களுக்கு தேவையான எந்த அம்சங்களும் இல்லை. ஏன், மிஷ்கின் படங்களின் மஞ்சள் கலர் புடவை பாடலும் இதில் இல்லை.

பாடல்கள், நகைச்சுவைக் காட்சி என்று எதுவும் இல்லாமல் வெளியான இப்படம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. பொதுமக்கள் மட்டும் இன்றி, இப்படம் குறித்து திரையுலகத்தினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்தை நடிகர் கமல்ஹாசனுக்கு, இளையராஜா போட்டுக்காட்டியுள்ளார். படத்தைப் பார்த்து அசந்துப்போன கமல், மிஷ்கினை பாராட்டியுள்ளார். மேலும், நாம இரண்டு பேரும் விரைவில் ஒரு படத்தில் இணையலாம் என்றும் சொல்லியிருக்கிறாராம். 

Comments