ஹங்கேரியில் நடைபெறும் 'இரண்டாம் உலகம்' பட ரீரெக்கார்டிங் பணி!!!

2nd of October 2013
சென்னை::'இரண்டாம் உலகம்' படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி ஹங்கேரியில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இப்படத்தின் பின்னணி இசையமைக்கும் அனிருத் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஹங்கேரி புறப்பட்டு சென்றுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பின்னணி இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் காலதாமதப்படுத்தியதால், அவருக்கு பதிலாக அனிருத் அந்த பணியை ஏற்றுள்ளார்.

இப்படத்தின் பின்னணி இசையை ஹங்கேரியில் வைத்து அமைக்க இயக்குநர் செல்வராகவன் முடிவெடுத்தார். இதற்காக, இசையமைப்பாளர் அனிருத்தும், செல்வராகவனும் ஹங்கேரி புறப்பட்டு சென்றுள்ளனர். ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் ‘சிம்பொனி’ இசை அமைத்து பின்னணியில் கோர்க்க உள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு பிரமிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், பின்னணி இசையிலும் பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இயக்குநரும், இசையமைப்பாளரும்
 தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

Comments