எம்டிவியின் ஐரோப்பிய இசை விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹனிசிங் இடையே கடும் போட்டி!!!

23rd of October 2013
சென்னை::எம்டிவி நிறுவனம் உலகளாவிய சிறந்த இசைக்கலைஞர்களை தேர்வு செய்து 'எம்டிவி ஐரோப்பிய இசை விருதுகள்' என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுகளுக்கான இசைக்கலைஞர்களை தேர்வு செய்யும் முயற்சியில் தற்போது இந்த டிவி நிறுவனம் மும்முரமாக களமிறங்கியுள்ளது. 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வு நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஐந்து இசைக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தந்த பிரிவுகளில் நடைபெறும் தேர்வில் முதலிடம் பெறுபவர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியா, ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள் போன்றவை ஒரே பிரிவாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஐந்து இசைக்கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், இந்தியாவின் சார்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பஞ்சாபின் ராப் இசைக் கலைஞரான யோ யோ ஹனிசிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'கடல்' படத்தில் வரும் 'நெஞ்சுக்குள்ளே' பாடலுக்காகவும், ஹனிசிங் தன்னுடைய 'பிரிங் மீ பேக்' என்ற பாடலுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பட்டமீஸ் டில், தும் ஹி ஹோ மற்றும் மன்ஜ்ஹா ஆகிய மூன்று பாடல் குழுவினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இத்தகை இசை விருதுகளுக்கான பரிசீலனையில் இருப்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் திறமை இருப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த இசைக் கலைஞர்கள் தேர்வின் இறுதி நிகழ்ச்சி நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் நவம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது.  
tamil matrimony_INNER_468x60.gif

Comments