அப்பா ஆனார் நடிகர் சிவகார்த்திகேயன்!!!

22nd of October 2013
சென்னை::சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக முன்னேறிய சிவகார்த்திகேயன், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோவாக முன்னேறியுள்ளார். தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் மகிழ்ச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளார்

காரணம், அவர் அப்பாவாகிவிட்டார். ஆம், சிவகார்த்த்கேயன் - ஆர்த்தி தம்பதிக்கு இன்று ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இன்று ஆர்த்திக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

Comments