20th of October 2013
சென்னை::இயக்குனர் அட்லி தன்னுடைய முதல் படமான 'ராஜா ராணி ' திரை படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே நிருபனம் செய்து உள்ளார். இந்த அறிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குனருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த இளம் இயக்குனர் அவர் மீது உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்து உள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலா ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்ற இவர்.
ராஜா ராணி படத்தை கமல் சார் தான் துவக்கினார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி பெற வேண்டும் , அவருக்கு இந்த வெற்றியை சமர்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னுடைய உழைப்பு அதன் பிரதி பலனாக கிடைத்த வெற்றி ஆகியவை பற்றி விவரமாக கேட்டு அறிந்தவர் , படத்தின் சிறு நுணுக்கத்தையும் விசாரித்த பொது அந்த மனிதரின் திரை உலக ஞானம் எவ்வளவு பெரியது என புரிந்தது . இந்த உன்னதமான உற்சாகமான நேரத்தில் எனது தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் , எ ஆர் முருகதாசின் ஏ.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் மற்றும் நெக்ஸ்ட் பிக் பிலம்ஸ் பிலிமஸ் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றிகள், என்னுடைய படத்தில் பணியாற்றிய நடிக நடிகையர் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி." என கூறினார்.

Comments
Post a Comment