8th of October 2013
சென்னை::இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது நடிகர் கருணாஸ் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜிடம் புகார் அளித்தார். அப்புகாரின் விவரம் கூறியதாவது:_
சென்னை::இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது நடிகர் கருணாஸ் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜிடம் புகார் அளித்தார். அப்புகாரின் விவரம் கூறியதாவது:_
எனது பெயர் கருணாநிதி, தற்போது திரைப்பட துறையில் எனது பெயர் கருணாஸ் ஆகும். நான் அகமுடையார் இனத்தை சேர்ந்தவர். நான் பல்வேறு திரைப்படங்களில் சமூக அக்கரையுள்ள ஒரு சிரிப்பு நடிகராகவும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறேன். இந்நிலையில் மதிப்பிற்குறிய பெருந்தலைவர் காமராஜரை பற்றி நான் அவதூறாக பேசினேன் என்று என்மீது கூறப்படும் வதந்திகள் அனைத்தும் பொய்யானவை.
ஏனென்றால் ஒருபோதும் நான் எந்தவொரு சமூகத்தையும், மதத்தையும் அவமதித்தது இல்லை. மேலும், நான் பெருந்தலைவர் காமராஜரை பற்றி அவதூறாக பேசினேன் என்று 04.10.2013 அன்று வார இதழில் என்னைப்பற்றி நடிகர் கருணாஸ் தேவர் அல்ல, சக்கிலியர் ஒரு புதிய சர்ச்சை என்ற தலைப்பில் அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் உண்மை என்ன தெரியுமா? கருணாஸ் பிறப்பில் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர் அல்ல பிறப்பால் சக்கிலியர் (தாழ்த்தப்பட்டோர்) கருணாசை பாவப்பட்டு வளர்த்தவர் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர், தைரியமும், துணிச்சலும் இருந்தால், கருணாஸ் தனது பிறப்பு சான்றிதழை காட்டட்டும் என்று சவால் விட்டார். அவரை வைத்து படம் தயாரித்து இயக்கி பலகோடி கடனாளியாகி அவதிப்படும் சக்தி சிதம்பரம் என்று என்னைப்பற்றி அவதூறாக எழுதி உள்ளனர்.
மேலும், இது போன்ற அவதூறான செய்திகளை வெளியிட்டது மட்டும் அல்லாமல், என் வீட்டிற்கு எதிரே முத்தையா, தேவராஜ் மற்றம் அவர்களுடன் 50_க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் தமிழ்நாடு தேவர் பேரவை என்று பொய்யாக கூறிக் கொண்டு என் வீட்டை முற்றுகையிட்டும் இவன் நம்ம தேவர் சமூகத்தை சேர்ந்தவன் அல்ல என்றும் கூறிக்கொண்டு மேற்படி நபர்கள் அனைவரும் சேர்ந்து கற்களால் என் வீட்டை தாக்கியும் என் சாதியைப் பற்றி ஆபாசமான வார்த்தைகளால் பேசியும், சுவரொட்டிகள் ஓட்டியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால் எங்கள் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மேலும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உண்டாக்கி சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளனர்.
எனவே, எனது சாதியைப் பற்றி அவதூறாக பேசி சமூக ஒற்றுமைக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்திய மேற்கண்ட நபர்கள் மீதும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி கருணாஸ் கூறினார்.
Comments
Post a Comment