ஹீரோக்களுக்கு இருக்கும் சிங்கர் மோகம் இப்போது காமெடியன்களுக்கும் வந்தாச்சு. சந்தானம் பாடகர் ஆனார்!!!

6th of October 2013
சென்னை::ஹீரோக்களுக்கு இருக்கும் சிங்கர் மோகம் இப்போது காமெடியன்களுக்கும் வந்தாச்சு. சந்தானம் அந்த லிஸ்டுல சேர்ந்தாச்சு. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானமும் நடிக்கிறார். ஆனால் அவர் பாடியிருப்பது ஸ்ரீகாந்துக்காக. தண்ணியே அடிக்காமல் நல்ல பிள்ளையாக இருக்கும் ஸ்ரீகாந்த், ஒரு கட்டத்தில் தண்ணி அடிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. முதன் முறையாக குடித்துவிட்டு போதையில் ஸ்ரீகாந்த் பாடுவதாக வரும் பாடல். இந்த பாடல் காட்சியில் சந்தானம் நடிக்கவில்லை. ஸ்ரீகாந்துக்காக பாடி உள்ளார்.

"ஆற அமர உட்கார்ந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி..." என்று தொடங்கும் வரிகளை கொண்ட பாடல். ஏற்கெனவே டாஸ்மாக் கடைக்கு அங்கீகாரமற்ற பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் சந்தானம், சரக்கின் பெருமையை பாடுகிறாராம். விவேகா எழுதிய இந்த வில்லங்க பாடலுக்கு விஜய் ஆண்டனி மியூசிக் போட்டிருக்கார். 5 மணி நேரம் ரிக்கார்டிங்கிற்காக ஒதுக்கி வச்சிருந்தாங்களாம். சந்தானம் 15 நிமிடத்தில் பாடிவிட்டு போய்விட்டாராம். பெருமையாக சொல்கிறார் இயக்குனர் கணேஷா. அதோடு சந்தானத்தின் குரல் ஸ்ரீகாந்துக்கு அப்படியே பொருந்தியிருக்கிறதாவும் சொல்கிறார்.

"சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதையான நண்பர் சந்தானம். எனக்காக அவர் நடித்து கொடுப்பதோடு, பாடியும் கொடுத்திருக்கிறார். நீங்க ஜெயிக்கணும் என்ற அவரோட நம்பிக்கையை நம்பியார் காப்பாற்றுவார்" என்று நெகிழ்ந்து போகிறார் ஸ்ரீகாந்த்.

Comments