சிம்புவும் ஆன்ட்டனியும் பிரிந்&#!!!

22nd of October 2013
சென்னை::எடிட்டர் ஆன்ட்டனியும், சிம்புவும் அவ்வளவு குளோஸ் பிரண்ட்ஸ். ஆன்ட்டனி கட் இல்லாமல் சிம்புவின் படங்கள் இல்லை என்கிற அளவுக்கு நெருக்கமான நட்பு அது. ஆனால் இப்போது சிம்புவின் படங்களில் ஆன்ட்டனி இல்லை. ஏன் என்ற கேள்விக்கு எடிட்டர் ஆன்ட்டனி மிக தெளிவாக பதிலளித்துவிட்டார். என்னவாம்? சிம்பு என்னோட பெஸ்ட் பிரண்டு.
 
ஆனால் ஒரு படத்துக்கு எடிட்டரை பிக்ஸ் பண்றது டைரக்டர் சாய்ஸ். இந்த படத்துக்கு வேற எடிட்டர் இருக்கலாமேன்னு டைரக்டருக்கு தோன்றியிருக்கும். பட் சிம்பு நல்ல நடிகர். என் நல்ல நண்பர். அவ்வளவுதான் என்கிறார். எடிட்டிங்கில் ஆன்ட்டனி
 
ஸ்டைல் என்று ஒரு தனி ஸ்டைலையே உருவாக்கியிருக்கும் அவர், பிற படங்களை பார்க்கப் போனால் அந்த படத்தில் எடிட்டிங் எப்படியிருக்கு? சண்டைக்காட்சிகள் எப்படியிருக்கு? என்று தனித்தனியாக அலசுகிற ஆள் இல்லையாம். ஒரு சராசரி ரசிகனா தியேட்டருக்கு போய், சராசரியா என்ஜாய் பண்ணிட்டு வந்துருவேன். அவ்வளவுதான் என்கிறார். விரைவில் ஆன்ட்டனியை இயக்குனராகவும் பார்க்கலாம். யெஸ்... அதற்கான சின்ன மூவ் ஒன்று நடந்து கொண்டிருக்கிறதாம். வாழ்த்துக்கள் ஆன்ட்டனி.

Comments