காஜல் அகர்வாலை, தெலுங்கு திரையுலகம் கழற்றி விட்டு உள்ளதால், தற்போது, தமிழ் படங்களில் நடிப்பதில் ஆர்வம்!!!
16th of October 2013
சென்னை::காஜல் அகர்வாலை, தெலுங்கு திரையுலகம் கழற்றி விட்டு உள்ளதால், தற்போது, தமிழ் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா’ படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், மேலும், சில படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறாராம். அவர் கேட்ட கதைகள் எல்லாமே, ஜனரஞ்சகமான கதைகளாம். இம்மாதிரி கதைகளாக தான் தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் சொல்கிறார் காஜல்.
காரணம் கேட்டால், ‘சினிமா ஒரு பொழுது போக்கு மீடியா. அதனால், தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள், இரண்டு மணி நேரம் ஜாலியாக, ரிலாக்ஸ் செய்ய தான் வருகின்றனர். அப்படி வருபவர்களை, முழு திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே ஜாலியான, காதல் கலந்த காமெடி படங்களாக நடிக்கிறேன்’ என்று கூறும் காஜல், ‘ரசிகர்களுக்கு கருத்து சொல்வது, கண்ணீர் சிந்த வைப்பது போன்ற கதைகளில் எப்போதுமே நான் ஆர்வம் காட்டுவதில்லை’ என்கிறார்.

Comments
Post a Comment