காமெடி நடிகர்களுக்கு அழகான ஹீரோயின் தேடும் இயக்குனர்கள்!!!

31st of October 2013
சென்னை::காமெடி நடிகர்களை வைத்து படம் இயக்குபவர்கள் அழகான ஹீரோயின்களை தேடுகின்றனர்.காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக நடிக்கும் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க காமெடி நடிகைகளை கைவிட்டு அழகான ஹீரோயின்கள் தேடுகின்றனர். சந்தானம் ஹீரோவாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் விசாகா சிங் நடித்தார். தற்போது வடிவேலு நடிக்கும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாக்ஷி தீட்சித், விடிவி கணேஷ் ஹீரோவாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்கின்றனர்.

அடுத்து தோடா அட்றா சக்க என்ற பெயரில் காமெடி படம் உருவாகிறது. ஸ்ரீகரபாபு இயக்குகிறார். அவர் கூறியதாவது: இதில் டாட்டா பிர்லா என்ற கதாபாத்திரத்தில் ஆர்யன் ரமேஷ், வாசு நடிக்கின்றனர். ஹீரோயின்களாக மோனிகா சிங், இஷாசாப்ரா நடிக்கின்றனர். கஞ்சா கருப்பு, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காமெடி படம் என்றாலும் இப்போது ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்காக இப்படத்திற்கு ஆடிஷன் வைத்து அழகான நடிகைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஜான் இசை அமைக்கிறார். டி.ரமேஷ்பாபு. டி.பிரவினா தயாரிக்கின்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments