8th of October 2013
சென்னை::இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.
இயக்குநர் கஸ்தூரிராஜவின் மூத்த மகனும், இயக்குநருமான செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை காதல் திருமணம் செய்துகொண்டார். பிறகு இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.
இதனையடுத்து, இவருடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லீலாவதி என பெயிரிட்டனர்.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான கீதாஞ்சலி அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர். செல்வராகவன் தற்போது ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படவேலைகளில் பிசியாக உள்ளார். ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Comments
Post a Comment