29th of October 2013
சென்னை::ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்த ரிச்சா வாய்ப்புகள் அவ்வளவாக வராத காரணத்தால் சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லியுள்ளார்
யுஎஸ்ஸில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் 2008ல் சினிமாவுக்குள் நுழைந்தார் ரிச்சா. ஓபனிங் எல்லாம் நன்றாகதான் இருந்தது. ஆனால் போகப் போக வாய்ப்புகள் குறைந்தன. கவர்ச்சியாக நடிக்கும்படி ஆனது. இப்போது தெலுங்கில் ஆடச்டி என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் செய்தியில், கடந்த ஒரு வருடமாக நடிப்பை தொடர்வதா படிப்பை தொடர்வதா என யோசித்து வந்ததாகவும், படிப்பை தொடர்வது என்று முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது சினிமாவுடனான நிரந்தர பிரிவல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தான் பாதியில் விட்டு வந்த படிப்பை தொடர்வதுடன் உயர் படிப்பு படிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் ரிச்சா.
Comments
Post a Comment