விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த பாண்டிய நாடு படம் தீபாவளிக்கு ரீலிசாகிறது. இதுகுறித்து விஷால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி!!!
21st of October 2013
சென்னை::விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த பாண்டிய நாடு படம் தீபாவளிக்கு ரீலிசாகிறது. இதுகுறித்து விஷால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:–
கேள்வி:– பாண்டியநாடு என்ன மாதிரி படம்?
பதில்:– ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் பழிவாங்கல்தான் கதை. என் அப்பா கேரக்டரில் பாரதிராஜா வர்றார். கடைசி இருபது நிமிட காட்சிகள் சீட் நுனிக்கே இழுக்கும். மதுரை பின்னணியில் படத்தை எடுத்து இருக்கோம். சண்டை சச்சரவுக்கு பயந்து ஒதுங்கி போகும் கேரக்டரில் நான் வருகிறேன். அடிக்கத் தெரியாதவன் அடித்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.
லட்சுமி மேனனுக்கும், எனக்குமான காதல் சீன்கள் நல்லா வந்து இருக்கு. பதட்டமாகும்போது என் வாய் திக்கும். லட்சுமி மேனனிடம் பேசும்போது வாய் திக்கி வேறு எதையோ பேசும் சீன்கள் கலகலப்பாக இருக்கும்.
கே:– பாரதிராஜாவுக்கு என்ன கேரக்டர்?
ப:– பாரதிராஜா என்ன தந்தை கேரக்டரில் பிரமாதமாக நடித்துள்ளார். அப்பாவுக்கு பிரச்சினை வரும்போது மகன் வருத்தப்படுவான். மகனுக்கு சங்கடங்கள் வரும்போது அப்பா வருந்துவார். இது இயற்கையாக நடப்பது. அதைத்தான் படத்தில் வைத்துள்ளோம். இந்த படத்தை இன்னொரு சண்டைக்கோழி என்கின்றனர்.
மீராஜாஸ்மின் போல் லட்சுமிமேனன் கேரக்டர் அமைந்துள்ளது. விக்ராந்தும், சிறப்பாக நடித்துள்ளார். டைரக்டர் சுசீந்திரன் கதை சொன்னதும் பிடித்ததால் நானே தயாரித்தேன்.
கே:– உங்களுக்கு திருமணம் எப்போது?
ப:– ஆர்யாவுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் என் திருமணம் நடக்கும். எங்கள் இருவரது பெற்றோரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது விஷால், ஆர்யா திருமணத்தை ஒரே மேடையில் நடத்தி விடலாமா? என்று பேசி உள்ளனர்.
கே:- அப்படியானால் இருவர் திருமணமும் ஒரே நாளில் நடக்குமா?
ப:– இல்லை. ஆர்யா திருமணம் முடிந்த மறுநாள் என் திருமணம் நடக்கும்.
கே:– நடிகையை திருமணம் செய்வீர்களா?
ப:– நடிகையை மணப்பதில் என்ன தவறு இருக்கிறது? நடிகையாகவும்
இருக்கலாம், டான்சராகவும் இருக்கலாம். ஆனால் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்கும்.
கே:– நடிகைகளுக்கு ஆர்யா பிரியாணி விருந்து கொடுக்கிறாராமே?
ப:– ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்து எல்லோரையும் மடக்குகிறார். எனக்கு தெரிந்த நடிகைகளிடம் அண்ணாநகரில் உள்ள ஆர்யா வீட்டிற்கு பிரியாணி சாப்பிட போகாதீர்கள் என்று சொல்லி வைக்கிறேன். பெண்கள் மத்தியில் ஒரு மணி நேரம் இல்லாவிட்டால் ஆர்யாவுக்கு ஜூரமே வந்துவிடும்.
பெண்களுக்கு அவரைத்தான் பிடிக்கிறது. என்னை எல்லாம் பிரியாணி விருந்துக்கு அழைப்பது இல்லை. வீட்டுக்கே பார்சலில் அனுப்பி விடுகிறார். ஆர்யாவை எனக்கு பிடிக்க காரணம் எதையும் சீரியஸ்சாக எடுத்துக்க மாட்டார். நட்சத்தர கிரிக்கெட்டில் எல்லா நடிகர்களும் மைதானத்தில் ஆட தயாராக நின்றோம். அம்பயரும் வந்து விட்டார். ஆர்யாவை காணவில்லை. தேடியபோது தொலைவில் சர்வசாதாரணமாக கொஞ்சம் இரு மச்சான் வந்துர்றேன் என்று சைகையில் சொல்லி விட்டு கையில் தட்டு வைத்து பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்தார். அதுதான் ஆர்யா.
இவ்வாறு விஷால் கூறினார்.
Comments
Post a Comment