ஸ்ரீபெரும்புதுார் அருகே, இரண்டு கோடி ரூபாயில், பிரமாண்டமாக செட் போட்டுள்ள சந்தானம்!!!

3rd of October 2013
சென்னை::ஹீரோவாக நடிக்கலாமா; வேண்டாமா’ என்ற குழப்பத்தில் இருந்த சந்தானம், நீண்ட கால ஆலோசனைக்கு பின், இறுதியாக, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற  படத்தில், ஹீரோவாக நடிக்கிறார்.

தான் ஹீரோவாக நடிக்கும் படம், சொதப்பி விடக் கூடாது என்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறாராம், அவர். படத்தை, பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர். இந்த படத்துக்காக, ஸ்ரீபெரும்புதுார் அருகே, இரண்டு கோடி ரூபாயில், பிரமாண்டமாக செட் போட்டுள்ளனர்.

படப் பிடிப்பு முடிந்தபின் கூட, இரவில்  சென்னைக்கு திரும்புவது இல்லையாம் சந்தானம். அங்கேயே தங்கியிருந்து, அடுத்த நாள் நடிக்கவுள்ள காட்சி குறித்து, ஒத்திகை பார்க்கிறாராம்

Comments