நையாண்டி படக்குழுவினருக்கு எதிராக நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார்!!!

7th of October 2013
சென்னை::தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நஸ்ரியா முன்ணணி வகிக்கிறார்,நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நஸ்ரியா,அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் அசத்தலாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்,இவர் தனுஷ்  ஜோடியாக நடித்த நையாண்டி படம் மிக விரைவில் திரைக்குவர இருக்கிறது.
 
இந்நிலையில் நையாண்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் மீதும் நஸ்ரியா நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக நஸ்ரியாவை தொடர்பு கொண்டு பேசிய போது ,தான் படம் பிடிக்க மறுத்த இடுப்பை அணைக்கும் காட்சி ஒன்றை தனது அனுமதி இன்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதை தனது முகத்துடன் இணைத்து படத்தின் போஸ்டர்களில் வெளியிட்டு தன்னை தவறாக சித்தரித்துவிட்டனர் என கண்ணீருடன் கூறினார்

மேலும் நடிகர் தனுஷுடன் தனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும் ,அவர் தனக்கு  மிகவும் ஆதரவாக இருக்கிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் 

Comments