நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட…” : ப்ரியா ஆனந்தை நேக்காக கழட்டி விட்ட ஜி.வி.பிரகாஷ்!!!

17th of October 2013
சென்னை::பென்சில்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க இருந்த ப்ரியா ஆனந்தை நிராகரித்து விட்டாராம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
அவருக்கு பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாக ஸ்ரீதிய்வா கமிட்டாகியிருக்கிறார். கெளதம் மேனனின் உதவியாளரான மணி டைரக்ட் செய்யப்போகும் இந்தப் படத்தில் தான் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பென்சில்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனாக நடிக்கிறார் ஜி.வி.முதலில் இந்தப்படத்தில் ப்ரியா ஆனந்த் தான் ஹீரோயினாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஒருவேளை போட்டோசெஷனில் ஜி.வி பக்கத்தில் நிற்கும் போது ப்ரியா ஆனந்த்தின் முகம் முத்தலாகத் தெரிந்தால் அவருக்குப் பதிலாக வேறு ஹீரோயின் நடிப்பார் என்று கூட டைரக்டர் யோசித்திருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது அது உண்மை தான் என்பது போல ப்ரியா ஆனந்தை தூக்கி விட்டு அவருக்குப் பதிலாக வ.வா.சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார்.

12 படிக்கு மாணவனான ஜி.வி.பிரகாஷ் ப்ரியா ஆனந்த்தை காதலிப்பது போன்ற சில காட்சிகளை டம்மியாக படமாக்கிப் பார்த்தபோது ப்ரியா ஆனந்த ஜி.வியை விட கொஞ்சம் முத்தல் முகமாகத் தெரிந்தாராம். அப்போ கண்டிப்பாக ஜி.விக்கு ப்ரியா ஆனந்த் சரிப்பட்டு வரமாட்டார் என்று அந்தக்காட்சிகளில் டைரக்டருக்கு திருப்தி வராததே பிரியா ஆனந்த் தூக்கலுக்கு முக்கிய காரணமாம்.

ப்ரியா ஆனந்த் ஏற்கனவே ‘எதிர்நீச்சல்’ படத்தில் ஸ்கூல் டீச்சராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments