தெலுங்கில் நடித்த படத்தை தமிழில் தன் அனுமதி இல்லாமல் டப் செய்வதாக ஹன்சிகா புகார்!!!

1st of October 2013
சென்னை::தெலுங்கில் நடித்த படத்தை தமிழில் தன் அனுமதி இல்லாமல் டப் செய்வதாக ஹன்சிகா புகார் அளித்துள்ளார்.
 
நிதின், ஹன்சிகா நடிப்பில் 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம்தான் சீதாராமுல கல்யாணம் லங்கலோ. வெல்பர் கிரியேஷன்ஸ் சார்பில் மல்லா விஜயபிரசாத் தயாரித்த இப்படத்தை ஈஸ்வர் இயக்கியிருந்தார்.
தற்போது மூன்றாண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தை தமிழில் ரவுடி கோட்டை என்ற பெயரில் மொழிமாற்றம் செய்ய உள்ளனர்.
 
எஸ்.சுந்தரலட்சுமி, தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார். இந்நிலையில் சீதாராமுல கல்யாணம் லங்கலோ படம் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கு அப்படத்தின் நாயகி ஹன்சிகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நான் சீதாராமுல கல்யாணம் லங்கலோ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது இப்படம் தெலுங்கில் மட்டுமே உருவாகும் தமிழில் டப் செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது சீதாராமுல கல்யாணம் லங்கலோ படம் தமிழில் டப் செய்து வெளியிடப் போவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்னிடம் அனுமதி பெறாமல் படத்தின் டப் செய்யும் உரிமையை வழங்கிய தெலுங்கு தயாரிப்பாளர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Comments