8th of October 2013
சென்னை::நடிகை அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார். திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. இதனால் பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர். ஏற்கனவே நாகார்ஜுனாவையும் அனுஷ்காவையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவின. இருவரும் அதை மறுத்தார்கள். ஆர்யாவுடனும் இணைத்து பேசப்பட்டார். இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஆர்யா இதனை மறுத்தார்.
தற்போது சினிமாவில் இல்லாதவரை திருமணம் செய்ய அனுஷ்கா முடிவு செய்துள்ளதாகவும் தகுதியான மாப்பிள்ளையை பெற்றோர் தேடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபாலி ஆகிய இரு படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்கிறார். உத்தம வில்லன் படத்தில் கமல் ஜோடியாக நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது. திருமணத்துக்காக அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

Comments
Post a Comment