30th of October 2013
சென்னை::அஜீத் நல்ல மனம் கொண்ட நடிகர் என்று புகழ்ந்துள்ளார் நயன்தாரா.
இருவரும் ஏற்கனவே பில்லா, ஏகன் படங்களில் ஜோடியாக நடித்தனர். தற்போது ஆரம்பம் படத்திலும் சேர்ந்துள்ளார்கள். முன்னணி கதாநாயகர்கள் பலர் இளம் நாயகிகளுடனேயே ஜோடி சேர விரும்புகின்றனர். திரிஷா, நயன்தாரா மாதிரியானவர்களை மூத்த நடிகைகளாக பாவித்து இணைந்து நடிக்க யோசிக்கிறார்கள். ஆனால் ஆரம்பம் படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக தேர்வு செய்து இருப்பதாக அப்படத்தின் டைரக்டர் விஷ்ணுவர்த்தன் கூறியதும், அஜீத் ஆட்சேபிக்கவில்லையாம். உடனேயே சம்மதம் தெரிவித்துள்ளார்.
காதல் சர்ச்சைகளால் மார்க்கெட் சரியும் என்று நினைத்த நயன்தாராவுக்கு அஜீத் ஜோடியானது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளிக்கு இப்படம் ரிலீசான பிறகு தன்னை இன்னும் உயரத்துக்கு கொண்டு போகும் என எதிர்பார்க்கிறார்.
அஜீத் குறித்து நயன்தாரா மனம் திறந்து சொல்கிறார். அஜீத் நல்லமனம் கொண்டவர். அவரைப்போல் ஒரு நடிகரை என் திரையுலக அனுபவத்தில் நான் பார்த்தது இல்லை. சக நடிகர்களை மதிப்பார். படப்பிடிப்பில் முன்னணி ஹீரோ இருந்தால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் டைரக்டர் படமாக்குவார். கதாநாயகரும் தனது சீன்களைத்தான் முதலில் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்.
ஆனால் அஜீத் அப்படி இல்லை. மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடிக்கும்வரை அங்கேயே பொறுமையாக காத்துக் கொண்டு இருப்பார். நடிப்பில் குறை தெரிந்தால் அதை சரிசெய்யவும் ஆலோசனை சொல்லுவார் என்றார்.
Comments
Post a Comment