நஸ்ரியாவுடன் நீயா நானா போட்டியில் குதித்த நயன்தாரா: கேரளத்தை சேர்ந்த சேச்சிகள்!!!

6th of October 2013
சென்னை::நயன்தாரா  - நஸ்ரியா இரண்டு பேருமே கேரளத்தை சேர்ந்த சேச்சிகள்தான். ஆனபோதும், மற்ற கேரளத்து நடிகைகளிடம் சகஜமாக மலையாளம் பறையும் நயன்தாரா, நஸ்ரியாவிடம் மட்டும் முகமலர்ச்சியுடன் பேசுவதில்லையாம். அவரே வலியச்சென்று பேசினால் மட்டும் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிட்டு முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொள்கிறாராம்.

என்ன காரணம்? என்று விசாரித்தால், ராஜாராணி படத்தில் நடிக்கத் தொடங்கியபோது நஸ்ரியாவிடம் நன்றாகத்தான் பேசி பழகியிருந்தாராம் நயன்தாரா. ஆனால், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அப்படத்தில் நடித்த சிலர் நயன்தாரா முன்னிலையில் நஸ்ரியாவின் நடிப்பை மானாவாரியாக புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம். அதோடு சிலர் தங்களுக்கு பரிட்சயமான டைரக்டர்களிடமும் நஸ்ரியாவுக்கு சிபாரிசுகளையும் முடுக்கி விட்டார்களாம்.

இதையெல்லாம் கண்டும் காணாததும் போல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த நயன்தாரா, அதன்பிறகு மெல்ல மெல்ல நஸ்ரியாவை விட்டு விலகி விட்டாராம். அதோடு, நஸ்ரியாவின் வளர்ச்சி இரண்டாவது இன்னிங்சில் இருக்கும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர், இப்போது அவருடன் நீயா - நானா என்று போட்டியிலும் இறங்கியிருக்கிறாராம் நயன்தாரா.

Comments