24th of October 2013
சென்னை::ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை மன்னர்கள் கவுண்டமணி , வடிவேலு இரு வேறு படங்களில் நடித்து கலக்க வருகிறார்கள்.
என்எஸ்கே, நாகேஷ் இருவருக்கு அடுத்து நகைச்சுவை என்றாலே அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளவர்கள் கவுண்டமணியும், வடிவேலுவும் மட்டும்தான்.
கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலமும், வடிவேலு ‘ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் மூலமும் ‘ரீ-என்ட்ரி’ ஆகிறார்கள்.
நகைச்சுவை’ என்ற பெயரில் இப்போது ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் சந்தனம் என்ற பெயரில் சேற்றை அள்ளி வீசி வரும் சூழ்நிலையில் கவுண்மணி, வடிவேலு இருவரின் வருகை சமூக வலைத்தளங்களில் அளவுக்கதிகமான ஆதரவை அள்ளி வருகிறது.
மீண்டும் வந்துட்டாங்கய்யா…வந்துட்டாங்க…என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இவர்களின் சவாலை எதிர் கொள்ள தயாராக இருக்குமாறு அந்த ஒரு சிலரை கேட்டுக் கொள்கிறோம்.
Comments
Post a Comment