என் மூக்கு என் பல்லு அடி ராசாத்தீ!!!

16th of October 2013
சென்னை::நடிகைகள் மூக்கு ஆபரேஷன் பண்ணிக் கொள்வது சகஜம்தான். அதற்கப்புறம் தங்களின் சினிமா கேரியர் தாறுமாறாக உயர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை அநேகமாக தனது மூக்கின் மேல் நம்பிக்கை வைக்காத  அத்தனை நடிகைகளுக்கும் இருக்கிறது. இந்த விஷயத்தில் மோனிகா ஸ்ட்ரிக்ட். இறைவனின் படைப்பை நமக்கு சவுரியப்படுகிற மாதிரி மாற்றி வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரது பாலிஸி.

அதே போன்றதொரு பாலிசியை கடை பிடிக்கிறார் அட்டைக்கத்தி நந்திதா. இவருக்கு பிரச்சனை மூக்கில் இல்லை. அவரது தெற்றுப்பல்லில் இருக்கிறது. இவரை பேட்டியெடுக்க போகும் நிருபர்கள், அதிகபட்ச உரிமையின் காரணமாக, அந்த பல்லை கொஞ்சம் மாற்றிடக் கூடாதா என்று கேட்க, அப்படியே இருக்கட்டும். அதை பார்த்துட்டுதானே முதல் வாய்ப்பு வந்துச்சு. அப்பறம் என்ன என்கிறார்.

 கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், சக நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கிற அளவுக்கு மனசை ஃபிரியாகவும் வைத்திருக்கிறார். இங்கேயும் பிறருக்கு டப்பிங் பேசும் நடிகைகள் இருக்கதான் செய்கிறார்கள். மனசே மனுஷியா இருந்தா இப்படியெல்லாம் கஷ்டம் வரதான் செய்யும்.

Comments