தெலுங்கில் அஜீத்தின் 'ஆட்டம் ஆரம்பம்'!!!

2nd of October 2013
சென்னை::அஜீத்-நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் படம் ஆரம்பம். இதில் பில்லாவுக்குப் பிறகு அஜீத்-விஷ்ணுவர்தன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
 
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்யா, டாப்ஸி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.
 
தெலுங்கில் இதற்கு ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைத்திருக்கிறார்கள். முதலில் தமிழில் கூட ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைப்பதாகத்தான் இருந்தது. ஆனால் ஆரம்பம் என்று வைத்துவிட்டனர்.
 
அஜீத் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே அங்கே சூப்பர்டூப்பர் ஹிட். அதனால் இப்போது அவர் நடித்துவரும் ஆரம்பம் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. 

Comments