7th of October 2013
சென்னை::தமிழ் திரைப்படத்தில் உலா என்ற படத்தில் மேற்கிந்திய தீவுகளின் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ நடனம் ஆடுகிறார். இந்த திரைப்படத்தை ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த காட்சியை ஏ.வி.எம். ஸ்டியோவில் இன்று படம் பிடிக்கப்படுகிறது.
நேற்று பிரசாத் ஸ்டியோவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:_
எனக்கு நடனம் ஆடப்பிடிக்கும். நான் இந்த பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 7 வருடங்களுக்கு பிறகு நடிக்கிறேன். இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் மேற்கிந்திய தீவில் 200_வது டெஸ்ட் போட்டி ஆடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் திறமையானவர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை போல எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. எனக்கு எப்போதும் கிரிக்கெட் ஒன்றே குறிக்கோள்.
இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் பிராவோ தற்போது சினிமாவிலும் ஜொலிக்கவுள்ளார். அதுவும் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழில் ராஜன் மாதவ் இயக்கும் உலா என்ற படத்தில் பிராவோ நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மைதானத்தில் இவரது டான்ஸை பார்த்த இயக்குனர் அது பிடித்துப்போய் இவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம்.
ராஜன் மாதவ் சேரன் நடிப்பில் வெளிவந்த 'முரண்' படத்தை இயக்கியவர். இவர் இயக்கும் இந்த புதிய படத்தை ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ஸ்ரீகாந்த் தயாரிக்க, இந்த படத்தில் ராஜன் மாதவ் இயக்குகிறார். இந்தப்படத்தில் வித்தார்த், அசோக் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
Comments
Post a Comment