29th of October 2013
நல்ல வாய்ப்புகளை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் நஸ்ரியா. அப்போது உடன் இருப்பவர்கள் கொடுத்த அட்வைசால் நிபந்தனைபோடுவதை அவர் கைவிட்டார் என்று கூறப்படுகிறது.
சென்னை::சற்குணம் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த படம் ‘நய்யாண்டி. இதில் ஹீரோயினாக நடித்த நஸ்ரியா இயக்குனருடன் மோதல் போக்கை கடைபிடித்தார். தான் நடிக்காத ஆபாச காட்சிகளை டூப் நடிகையை வைத்து படமாக்கி இருக்கிறார்கள் என்று போலீசில் புகார் அளித்தார். பல்வேறு பஞ்சாயத்துகளுக்கு பிறகு படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்கினர்.
ஜீவாவுடன் ஜோடியாக நடிக்க இருந்த படம் உள்பட 2 படங்களில் அவரை இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்யாமல் தவிர்த்துவிட்டனர். இதனால் ஷாக் ஆனார் நஸ்ரியா. ஹீரோயின்களின் பலத்த போட்டிக்கு மத்தியில் முன்னேறி வந்துக்கொண்டிருந்த நஸ்ரியாவுக்கு இதனால் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து தனது கண்டிஷன்களை நஸ்ரியா மூட்டை கட்டி வைத்திருக்கிறார். சமீபத்தில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். காதலில் சொதப்புவது எப்படி படம் இயக்கிய பாலாஜி மோகன் இயக்குகிறார். ‘படத்தில் நடிக்க நஸ்ரியா கண்டிஷன் போட்டாரா? என பாலாஜி மோகனிடம் கேட்டபோது, ‘நஸ்ரியா எந்த கண்டிஷனும் போடவில்லை. இப்படத்துக்காக துல்கர் சல்மான், நஸ்ரியாவை வைத்து போட்டோ ஷூட் நடத்தினோம். அப்போதுகூட யூனிட்டில் கொடுத்த காஸ்டியூமை அணிந்து போஸ் தந்தார் என்றார்.
Comments
Post a Comment