2nd of October 2013
சென்னை::சிங்கம்-2 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, லிங்குசாமி மற்றும் கெளதம் மேனன் படங்களில் நடிக்க கமிட்டானார். இதில் கெளதம் மேனன் இயக்கும் படத்திற்கு ‘துருவ நட்சத்திரம்’ என்று பெயர் வைக்கப்பட்டு படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிப்பார்கள் என்று பார்த்தால் அதன் பிறகு அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டனர்.
என்னவென்று விசாரித்ததில் ‘துருவ நட்சத்திரம்’ கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி கெளதம் மேனனிடம் கூறியுள்ளார் சூர்யா. ஆனால் இதற்கு கெளதம் ஒத்துக்கொள்ளவில்லை, இதனால் இருவருக்குள்ளும் பிரச்னை என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் இதைப்பற்றி சூர்யாவோ, கெளதம் மேனனோ வாய்திறக்கவில்லை, அதேசமயம் அந்த தகவலையும் மறுக்கவில்லை. இதனால் படம் டிராப் ஆகிவிட்டது என்று அனைவரும் கருதினர்.
இந்நிலையில் சூர்யாவுக்காக இறங்கி வந்துள்ளார் கெளதம் மேனன். சூர்யா சொன்னபடியே கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார்.
இந்நிலையில் சூர்யாவுக்காக இறங்கி வந்துள்ளார் கெளதம் மேனன். சூர்யா சொன்னபடியே கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார்.
துருவ நட்சத்திரத்தை அறிவித்து அதே வேகத்தில் பூஜையுடன் படத்தை தொடங்கினார் கௌதம் வாசுதேவ மேனன். அதே வேகத்தில் படமும் பெட்டிக்குள் போனது. டிஸ்கஷன் போய்கிட்டிருக்கு என்று சும்மாச்சுக்கும் சொன்ன சூர்யாவும் கொஞ்ச நாட்களாக படு சைலண்ட்.
அடுத்து சூர்யா லிங்குசாமியின் படத்தில் நடிப்பது உறுதியான நிலையில் மீண்டும் துருவ நட்சத்திர பேச்சை எடுத்திருக்கிறார் கௌதம். சமூக வலைதளத்தில் அதுபற்றி தெரிவித்திருப்பவர், துருவ நட்சத்திரம் கதையை மாற்றிவிட்டேன், படத்தை விரைவில் தொடங்கயிருக்கிறோம் என்று எழுதியுள்ளார்.
ஹீரோயின் யார். உங்க சாய்ஸ் த்ரிஷாவா? இல்லை சூர்யாவின் சாய்ஸா?
Comments
Post a Comment