31st of October 2013
சென்னை::இவன் வேற மாதிரி’ ஆடியோ வெளியீட்டு விழா, நவம்பர் முதல் வாரத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
கும்கி படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்து வரும் படம்தான் ‘இவன் வேற மாதிரி’. இந்தப்படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் சரவணன் இயக்கியிருக்கிறார். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்து விட்டது.
எங்கேயும் எபோதும்’ படத்திற்கு இசை அமைத்த சத்யாதான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, நவம்பர் முதல் வாரத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. ‘யுடிவி’ நிறுவனமும், லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கின்றன.
’வேட்டை’, ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’ போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

Comments
Post a Comment