பாண்டிய நாடு படத்தில் பின்னணி பாடுகிறார் ரம்யா: என் படத்தில் ரம்யா எதற்கு? லட்சுமி மேனன் கோபம்!!!

1st of October 2013
சென்னை::விஷால் நடிக்கும் பாண்டிய நாடு படத்தில்  பின்னணி பாடுகிறார் ரம்யா நம்பீசன். இதை கேள்விப்பட்டு அப்படத்தின் நாயகி லட்சுமி மேனன் கோபமாகியுள்ளாராம். வேறொரு பட ஷூட்
டிங்கில் இருந்த லட்சுமியிடம் பாண்டிய நாடு படத்தில் உங்களுக்கான பாடலுக்கு குரல் கொடுப்பது யார் தெரியுமா என சிலர் கிளறிவிட்டனர். தெரியாதே என லட்சுமி சொன்னதும்
 
பீட்சா ஹீரோயின் ரம்யா நம்பீசன்தான் என கூறியுள்ளனர். மேலும் லட்சுமியை உசுப்பிவிடும் விதத்தில் அந்த குரூப் பேச, கோபத்தின் உச்சிக்கே சென்றாராம் லட்சுமி. என் படத்தில் ரம்யா எதற்கு பாட வேண்டும் என்று கோபப்பட்டாராம். பின்னணி பாடுவது குறித்து ரம்யா கூறும்போது, ஏற்கனவே விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் பாட கேட்டனர். நேரம் இல்லை. இப்போது பாண்டிய நாடு படத்துக்கு கேட்டதும் ஒப்புக்கொண்டேன். இதில் லட்சுமி மேனனுக்காக பாடுகிறேனா என்பது தெரியாது என்றார். 

Comments