31st of October 2013
சென்னை::சென்னை மற்றும் புறநகர்களில் 31 திரையரங்குகளில் ஆரம்பம் வெளியாகிறது. அழகுராஜாவுக்கு 28 திரையரங்குகள். ஆரம்பத்துக்கு இணையான (சில மேன்மையான) திரையரங்குகள் அழகுராஜாவுக்கு கிடைத்திருக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை இரு படங்களின் ஒருவார காலத்துக்கான டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. பாண்டிய நாடு படத்துக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது. மூன்று படங்களில் மூன்றாவது இடம் விஷடல் படத்துக்கு. ஆனால் விஷடலின் முந்தையப் படங்களுடன் ஒப்பிடுகையில் பாண்டிய நாடு படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சரியமானது.
ஆரம்பம் 31 ஆம் தேதியே வெளியாகிறது. மற்ற படங்கள் நவம்பர் 2. இரண்டு நாள்கள் முன்னதாக ஆரம்பம் வெளியாவதால் சென்னையில் மட்டும் இவ்விரு தினங்களில் மூன்று முதல் நான்கு கோடிகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
ஆரம்பம், அழகுராஜா, டிக்கெட் முன்பதிவு, தீபாவளி ரிலீஸ்
Comments
Post a Comment