அஜீத் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவர இருக்கும் வியாழக்கிழமையும்... ஆரம்பமும்!!!

24th of October 2013
சென்னை::அஜீத் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா, அதுல் குல்கர்னி என ஏகப்பட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஆரம்பம் படம் உருவாகி இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் என்பவர் தயாரித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்திற்கும் ‘யு’ சான்று கிடைத்துள்ளதால் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர். தீபாவளிக்கு இருதினங்களுக்கு முன்னர் அக். 31ம் தேதி படம் உலகம் முழுக்க ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தினம் தினம் வெளியாகி கொண்டு வருகிறது. அந்தவகையில் ஆரம்பம் படம் பற்றிய இப்போதைய சுவாரஸ்ய தகவல் இதுதான். அதாவது இப்படம் ஆரம்பித்த நாள் முதல் ரிலீஸாக போகும் நாள் வரை எல்லாமே வியாழக்கிழமை தான். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் கூறியிருப்பதாவது, ஆரம்பம் படம் தொடர்பான அஜித்திடம் பேசியது, அவரும் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இரண்டும் வியாழக்கிழமை தான். அதுமட்டுமின்றி படத்தின் முதல் டீசர், டிரைலர், படத்திற்கு கிடைத்த யு சான்று எல்லாமே வியாழக்கிழமை தான். இது எல்லாமே நாங்களாக‌ தேடி செய்யவில்லை, தற்செயலாகவே அமைந்துவிட்டது. அதனால் தான் படத்தையும் வியாழக்கிழமை வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

Comments