சென்னை::தொடர் வெற்றிகளால் மகிழ்ச்சியிலிருக்கும் சிவகார்த்திகேயன் புதிதாக நடிக்கும் திரைப்படம் 'மான்கராத்தே'. இப்படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி நடித்துள்ளாராம் சிவகார்த்திகேயன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் வெட்டியாக ஊர் சுற்று
ம் வாலிபராக நடிந்திருந்தார். ஆனால் இப்போது ஹன்சிகாவுடன் நடித்து வரும் மான்கராத்தே படத்தில் வழக்கத்தில் இருந்து மாறுபட்டு டீசன்டான பையனாக நடிக்கிறாராம். இதனால் அவரது சிகை அலங்காரம், உடை அலங்காரம் என எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறார்களாம். ஹன்சிகாவுக்கு இணையாக சிவாவின் கெட்டப்பில் பிரமாண்டம் தெரிய வேண்டும் என்பதே படக்குழுவினரின் நோக்கமாம். இதற்கேற்ப பாடல் காட்சிகளில் மட்டுமின்றி, படம் முழுவதிலும் ஹன்சிகாவுக்கு பொருத்தமான நடிகராக தன்னை புதுப்பித்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.

Comments
Post a Comment