27th of October 2013
சென்னை::கடந்த வாரத்தில்தான் தனது தங்கை நிஷா அகர்வால் மும்பை தொழிலதிபரை டிசம்பர் 28-ந்தேதி திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார் காஜல்அகர்வால். அதையடுத்து, அவரது அபிமானிகள் பலரும், காஜலின் திருமணம் குறித்து கேட்டு அவரை நச்சரித்தனர். ஆனால் அதுகுறித்து யாருக்கும் சரியான பதிலை கொடுக்காமல் நழுவினார் காஜல்.
இந்த நிலையில், ஏற்கனவே ஆந்திர தொழிலதிபரை அவர் காதலித்து வருவதாக பரவிய செய்தியில் பெட்ரோலை ஊற்றியது போல், தங்கை கல்யாணம் முடிந்ததும் சில மாதங்களிலேயே காஜல்அகர்வாலும் ஆந்திர தொழிலதிபரை திருமணம் செய்து கொள்கிறார் என்று யாரோ தீப்பந்தம் கொளுத்தியுள்ளார்களாம்.
அதுமட்டுமின்றி, இதன்காரணமாக தமிழில் கமலுடன் நடிக்கயிருந்த உத்தமவில்லன், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்கயிருந்த படங்களில் இருந்து காஜல் தாமாகவே விலகி விட்டதாகவும் பரபரப்பு செய்தி பரப்பி விட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து காஜலை தொடர்பு கொண்ட மீடியாக்களிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகி விட்டாராம். அதனால் ஒருவேளை இந்த செய்திகள் உண்மையாக இருக்குமோ என்று மீடியாக்கள் கருதுகின்றன.

Comments
Post a Comment