மறுபடியும் லட்சுமி மேனன் தான் வேண்டும் - விஷாலின் பிடிவாதம்!!!

22nd of October 2013
சென்னை::'கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் லட்சுமி மேனன் விஷாலுக்கு ஜோடியாக 'பாண்டிய நாடு' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியாகிறது. இந்த படத்தை விஷாலே தயாரித்துள்ளார்.

இதற்கிடையில், விஷால் அடுத்ததாக நடித்து, தயாரிக்கும் படத்திலும் லட்சுமி மேனன் தான் ஹீரோயினாம்.

விஷாலை வைத்து தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் ஆகிய இரண்டுப் படங்களை இயக்கிய திரு இயக்கப் போகும் இந்த படத்தில், ஹன்சிகாவை தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய இருந்தார்கள். ஆனால், பாண்டிய நாடு படத்தில் லட்சுமி மேனனின் நடிப்பு விஷாலுக்கு ரொம்ப பிடித்துவிட்டதாம். அதனால், தனது அடுத்தப் படத்திற்கும் லட்சுமி மேனன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்காத குறையாக இயக்குநரிடம் சொல்லிவிட்டாராம்.

வெறும் ஹீரோவாக மட்டும் இருந்தால் பரவாயில்லை, தயாரிப்பாளர் வேற, இயக்குநர் எந்த மறுப்பும் சொல்லாமல், லட்சுமி மேனனையை டிக் செய்துவிட்டாராம்.

Comments