எனக்கும் சிம்புவுக்கும் பர்சனலா எந்தப் பிரச்சனையும் இல்லை: தனுஷ்!!!

23rd of October 2013
சென்னை::நானும், சிம்புவும் நண்பர்களானது பலருக்கு பிடிக்கவில்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வார்கள். அது சிம்பு-தனுஷ் விஷயத்தில் சரியாக பொருந்தும். ஒரு சமயத்தில் தொழில் ரீதியாக பார்க்கும் போது இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது என்னமோ உண்மைதான்.

ஆனால் இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு இருவரும், ஒருவரையொருவர் நட்பு பாராட்டி வருவது என்பது தொடர் நிகழ்வாகிவிட்டது. இது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்டுத்தியுள்ளது. அண்மையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூட தனுஷ், சிம்புவின் நட்பு குறித்து பெரிதாக பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு...

என்னோட அதிகமான சர்ச்சைக்குரிய நண்பர் சிம்பு.

சிம்புகிட்டயும், என்கிட்டயும் நிறைய வேற்றுமை இருக்கு.  நான் எதையுமே கடகடன்னு செய்யறவன், அவர் எதையும் பொறுமையா செய்யறவரு.
ரெண்டு பேரும் கும்ப ராசி, ரெண்டு பேரும் சதய நட்சத்திரம். எங்க ரெண்டு பேருக்குள்ளயும் அது ஒரு ஒற்றுமை.  இன்னொரு ஒற்றுமை என்னன்னா, எங்க ரெண்டு பேரையுமே புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்.

என்னை விட ரெண்டு வயசோ, ஒன்றரை வயசோ சின்னவருன்னு நினைக்கிறேன்.

நிறைய பேருக்கு நானும், சிம்புவும் பிரண்ட்ஸ் ஆனது பிடிக்கலை. பல பேர் அதை என் கிட்டயே வந்து வெளிப்படுத்தினாங்க. பாவம், அவங்களுக்கு மெச்சூரிட்டி இல்லை, என்ன பண்றது. ஆனால், நாங்க ரெண்டு பேரும் அதைப் பத்திக் கவலைப்படலை.

மேலும் எங்களுக்குள் பர்சனலா எந்த பிராப்ளமும் இல்லை. ஒரு ஃபங்ஷன்ல சந்தித்த பிறகுதான் நாங்க பிரண்ட் ஆனோம்.
எனக்கு நல்லது நடக்கணும்னு அவர் நினைக்கிறாரு, அவருக்கு நல்லது நடக்கணும்னு நான் நினைக்கிறேன்.

அந்த அளவுக்கு, சினிமா வாழ்க்கையை தனியாவும், நிஜ வாழ்க்கைய தனியாவும் பிரிச்சிப் பார்த்து எங்களால நல்ல நண்பர்களா இருக்க முடியுதுன்னா, அது ஏன் மற்றவர்களை உறுத்துதுன்னு தெரியலை.

ஒரு வேளை, மத்தவங்களால அத மாதிரி இருக்க முடியலையோ என்னவோ..
எங்களுக்குள்ள புரிஞ்சிக்கிட்டு நாங்க நல்ல நண்பர்களா இருக்கோம். இப்படி நடந்தது ரொம்ப நல்ல விஷயம், ” என தனுஷ் இவ்வாறு கூறினார்.

Comments