சந்தானத்துக்கு செகண்ட் சறுக்கல் ஆபாச வசனத்துக்கு கட்!!!

31st of October 2013
சென்னை::சந்தானம் பேசிய வசனத்துக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் படத்திலிருந்து நீக்கப்பட்டது.ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் புகைப்பழக்கம் கைவிட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு விளம்பரத்தை கிண்டல் செய்யும் விதமாக காமெடி நடிகர் சந்தானம் வசனம் பேசியதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் என்றென்றும் புன்னகை என்ற படத்தில் பெண்களை தரக்குறைவாக பேசும் வகையில் வசனம் பேசியதாக மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி என்றென்றும் புன்னகை இயக்குனர் அஹமத் தரப்பில் கூறியதாவது:சந்தானம் பேசிய குறிப்பிட்ட வசனம் இடம் பெற்ற டிரைலர் தணிக்கை செய்யப்படாதது. இதை சிறிய அளவிலான ரசிகர்களுக்கு மட்டுமே ஆடியோ ரிலீசின்போது திரையிடப்பட்டது. எதிர்பாராதவிதமாக தணிக்கை செய்யப்பட்ட டிரைலருக்கு பதிலாக தணிக்கை செய்யப்படாத டிரைலரே ஆன்லைனிலும் காட்டப்பட்டுவிட்டது. தற்போது அது நீக்கப்பட்டுவிட்டது. படத்திலும் அந்த வசனம் இடம்பெறாது. சமீபத்தில் புகைபழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு விளம்பரத்தை கிண்டல் செய்ததாக சந்தானம் மீது புகார் கூறப்பட்டது. எனவே அவர் பேசிய இந்த வசனத்துக்கும் எதிர்ப்பு கிளம்ப அது காரணமாகிவிட்டது என்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments