ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்!!!

2nd of October 2013
சென்னை::ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப்பிறகு தெலுங்கிற்கு சென்ற ஸ்ருதிஹாசன் அங்கிருந்து இந்திக்கு சென்று விட்டார். இப்போது அந்த இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்துக்கொண்டிருககிறார். இந்த நேரத்தில் சில தமிழப்பட வாய்ப்புகள் சென்றபோது, என் அப்பா விஸ்வரூபம்-2 படத்திற்கு என்னிடம் கால்சீட் கேட்டால்கூட இப்போது கொடுக்க முடியாத அளவுக்கு செம பிஸி நான் என்று சொல்லி தமிழ்ப்படங்களை தவிர்த்து வந்தார் ஸ்ருதி.

தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்து வரும் அவருக்கு இந்தியில் மூன்று படங்கள் கைவசம் உள்ளதாம். இந்த நிலையில், தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்து ஆர்யாவைக்கொண்டு தான் இயக்கும் படத்திற்கு ஸ்ருதியிடம் கால்சீட் கேட்டுப்பார்க்கலாமே என்று ஒரு கல்லெறிந்து பார்த்தாராம். கதையைக்கேட்ட ஸ்ருதிக்கு தனக்கான ரோல் வித்தியாசமாக தெரிய கைவசம் உள்ள படங்களை முடித்ததும் கால்சீட் தருவதாக கூறியிருக்கிறாராம்.

அதனால் ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் நடித்து வரும ஆர்யா அந்த படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Comments