ஆர்யா, காதல் மன்னன் என்பது, கோடம்பாக்கத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த திரையுலகத்துக்கும் தெரிந்த விஷயம்!!!

23rd of October 2013
சென்னை::ஆர்யா, காதல் மன்னன் என்பது, கோடம்பாக்கத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த திரையுலகத்துக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், சமீபகாலமாக, தன் இமேஜுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான, விஷயங்களை, தனக்கு நெருக்கமானவர்களே, வெளிப்படையாக கூறி வருவதால், வருத்தத்தில் இருக்கிறாராம், ஆர்யா.
 
ஆர்யா, எப்போதுமே, ஹீரோயின்களுடன் தான், பேசிக் கொண்டிருப்பார். பிரியாணி பார்ட்டி என்பது போன்ற தகவல்கள் அவரை, சற்று காயப்படுத்தியுள்ளதாம். இதுபோன்ற விமர்சனங்கள், தன் திரையுலக வளர்ச்சிக்கு, முட்டுக் கட்டையாக இருக்கும் என்பதால், இனிமேல், கவனத்துடன் செயல்பட முடிவு செய்துள்ளாராம், ஆர்யா.

Comments