29th of October 2013
சென்னை::காளி என்ற பெயரை மாற்ற ஒருபக்கம் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். இது பெயர் பற்றிய விஷயமில்லை, காளியில் கார்த்தியின் கெட்டப்பை பற்றியது.
அட்டகத்தி ரஞ்சித் வடசென்னை பின்னணியில் காளியை உருவாக்குகிறார். வட சென்னையின் கரடு முரடான மனிதர்களை மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர்களின் மென்மையான பக்கத்தை அட்டகத்தியில் ரஞ்சித் தொட்டுச் சென்றார். இந்தப் படத்தில் அவர்களின் காதலை, விளையாட்டு மீதான அவர்களின் வெறியை, இசைக்கச்சேரி மீதான அவர்கள் தீராக்காதலை கார்த்தியை மையப்படுத்தி சொல்லவிருக்கிறார்.
பறட்டை தலை, கசங்கிய லுங்கி இல்லையெனில் பாந்தமாக தலைசீவி மாடர்ன் ட்ரெஸ். இந்த இரண்டுக்கு வெளியே எதையும் அனுபவப்பட்டதில்லை கார்த்தி. கெட்டப் என்ற பெயரால் எதையாவது செய்து பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையானால்...? அதனால் யாரும் முயற்சித்ததுமில்லை.
காளியில் சின்னதாக ஒரு மாற்றத்தை பரிசோதித்துப் பார்க்கிறார் ரஞ்சித். அதிகம் இழுப்பானேன்... கார்த்தி இந்தப் படத்தில் முதல்முறையாக ஃப்ரெஞ்ச் தாடி கெட்டப்பில் வருகிறார்.
காளியில் கார்த்தியின் ஜோடியாக கேதரின் தெரேஸா நடிக்கிறார்.
Comments
Post a Comment