2nd of October 2013
சென்னை::தனுஷ் நடித்திருக்கும் நய்யாண்டி படத்துக்கு சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளது களவாணி, வாகை சூட வா படங்களுக்குப் பிறகு சற்குணம் தனுஷை வைத்து நய்யாண்டியை இயக்கியிருக்கிறார்.
தனுஷ் ஜோடி நஸ்ரியா நசீம். பல் மருத்துவ மாணவியாக நடித்துள்ளார். அவருக்கும் குத்து விளக்கு செய்யும் தனுஷுக்கும் இடையில் மலரும் காதல்தான் படத்தின் மையம். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் அளித்துள்ளது.
Comments
Post a Comment