பொது நிகழ்ச்சிகளுக்கு அரைகுறை ஆடையில் கவர்ச்சிக்கு மாறிய சமந்தா!!!

8th of October 2013
சென்னை::நடிகை சமந்தா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். பொது நிகழ்ச்சிகளுக்கு அரைகுறை ஆடையில் வருகிறார். சக நடிகைகள் போட்டியை சமாளிக்க படங்களிலும் கவர்ச்சிக்கு சம்மதித்து உள்ளார்.

தற்போது ‘ஆட்டோ நகர் சூர்யா’, ‘மனம்’ போன்ற தெலுங்கு படங்களில் சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்களில் கவர்ச்சியாக தோன்ற போகிறாராம்.

நடிகைகள் சுருதிஹாசன், ஹன்சிகா, டாப்சி, அனுஷ்கா போன்றோர் தூக்கலாக கவர்ச்சி காட்டுகிறார்கள். ‘டூயட்’ பாடல்களிலும் நெருக்கம் காட்டுகிறார்கள். சமந்தா இதுபோன்று நடிக்க மறுத்து வந்தார். இதனால் படங்கள் குறைந்தது. இதையடுத்து கவர்ச்சியாக நடிப்பது என்று மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு கால்கள் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்து பார்வையாளர்களை பரபரக்க வைத்தார்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments