கேஸ் போட ரொம்ப நேரம் ஆகாது, ஜாக்கிரதை… த்ரிஷா எச்சரிக்கை!!!

9th of October 2013
சென்னை::தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு நடிகை த்ரிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேவையில்லாமல் தன்னைப் பற்றி கிசுகிசுக்களைக் கிளப்புவோருக்குத்தான் இந்த வார்னிங் கொடுத்துள்ளார் திரிஷா.
இதற்கு மேலும் இந்தப் பொய்யான அவதூறுகளைப் பொறுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் த்ரிஷா குடிபோதையில் பாரில் இருப்பது போன்ற படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
த்ரிஷா பார் ஒன்றில் சக நடிகைகளுடன் மது விருந்தில் கலந்து கொண்டதாகவும் அதில் அவர் ஓவராக குடித்ததாகவும் செய்திகள் வந்தன. இந்த தகவல் த்ரிஷாவின் காதுகளையும் எட்டியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், அவர்களுக்கு ஏதாவது புதிததாக செய்தி போட வேண்டும். அவர்கள் ரூமில் உட்கார்ந்து யோசித்து வதந்திகளை பரப்பாமல் உருப்படியாக ஏதாவது செய்யட்டும்.
நடிகர், நடிகைகள் பிசியானவர்கள் தான். ஆனால் வழக்கு தொடர ரொம்ப நேரம் ஆகாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு இது என்னுடைய எச்சரிக்கை என்றார்.

Comments