12th of October 2013
சென்னை::எதிர்நீச்சல் படத்துக்கு முன்பெல்லாம், விளையாட்டுப் பிள்ளையாக இருந்தார் ப்ரியா ஆனந்த். அவர் ஸ்பாட்டிற்கு வந்து, சில மணி நேரங்களில் அவரது சக தோழிகள் சிலரும் ஸ்பாட்டுக்கு வந்துவிட, அவர்களுடன் எந்நேரமும் அரட்டையில் ஈடுபடுவார், ப்ரியா. ஆனால், எதிர்நீச்சல் படத்தில் நடித்தபோது, நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய சிந்தனை இல்லாமல், சிரித்து விளையாடிக் கொண்டிருந்தால், எப்படி கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்க முடியும் என்று சிரித்துக் கொண்டே ப்ரியா ஆனந்துக்கு அட்வைஸ் செய்தாராம் தனுஷ்.
விளைவு, அன்றோடு தோழிகளை படப்பிடிப்பு தளத்துக்கு வரவைப்பதை நிறுத்திவிட்ட ப்ரியா, இப்போதெல்லாம் ஸ்பாட்டிற்கு வந்ததும், டயலாக் பேப்பரை வாங்கிக் கொண்டு, மனப்பாடம் செய்தபடி ரிகர்சலில் ஈடுபடுகிறார். அதோடு, தனுஷ் சாரின் அறிவுரைப்படி, என்னை மாற்றிக் கொண்ட நான், அவரே என் நடிப்பை பாராட்டும் அளவுக்கு நல்ல நடிகையாக பெயரெடுப்பேன்’ என்கிறார் ப்ரியா ஆனந்த்.
Comments
Post a Comment