'ராஜா ராணி' இந்தி ரீமேக்கை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!!!

3rd of October 2013
சென்னை::ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரது நடிப்பில், புதுமுக இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மக்களிடை பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவிக்கிறது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வெளியான முதல் வாரத்திலேயே பல கோடிகளை ஈட்டு வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தின் இயக்குநர் அட்லி, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தி ராஜா ராணி படத்தில், ஆர்யா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், நயன்தாரா நடித்த வேடத்தில் தீபிகா படுகோனேயும் நடிக்கின்றனர்.

இந்தியில் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்றும் கூறப்படும் இப்படத்திற்கு இந்தியில் 'கிங் அன்ட் குயின்' என்று தலைப்பு வைக்கப்படுள்ளதாம்.

Comments