இலை, தழை சாப்பிடும் விக்ரம்!!!

28th of October 2013
சென்னை::ஷங்கர் இயக்கும் ‘ஐ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் 3 விதமான தோற்றங்களில் விக்ரம் நடிக்கிறார். அந்த வகையில்  ‘ஐ படத்துக்காக விக்ரம் சற்று கூடுதலான ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்கிறது பட குழு. ஒரு தோற்றத்திற்கு எலும்பும் தோலுமாக உடலை மெலியச் செய்ய வேண்டும் என்று இயக்குனர் கூறினார்.
 
அதற்கு ஒப்புக்கொண்டு கடுமையான உணவு கட்டுப்பாடுடன் இருந்து ஒல்லிபிச்சானாக மாறி நடித்திருக்கிறார் விக்ரம்.

இதுபற்றி படக்குழுவினர் கூறும்போது, ‘உடல் மெலிவதற்காக இலை தழைகளையும், காய் கனிகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்
விக்ரம். அவரது ஈடுபாடு வியக்க வைக்கிறது என்றனர்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments